பதவி விலகிய மஹேல ஜயவர்தன.

இலங்கை  கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோகராக கடமையாற்றிய முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன பதவி விலகியுள்ளார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தாம் பதவி விலகுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளது

மஹேல ஜயவர்தனவின் பதவிக் காலத்தில்  இலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு அடிப்படை மாற்றங்களை மேற்கொண்டதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மேலும், மஹேல ஜயவர்தனவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மைய போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. குறிப்பாக அண்மையில் உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை வெளியேறியமை பல்வேறு மட்டங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது.

இந்த நிலையில் மஹேல ஜயவர்தன தனது பதவி விலகல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.