யூரோ கோப்பை -தொடரிலிருந்து வெளியேறியது குரோஷியா! ஸ்பெயின், இத்தாலி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!
இந்த ஆண்டிற்கான யூரோ கோப்பை தொடரானது நடைபெற்று வரும் நிலையில் B பிரிவில் உள்ள ஸ்பெயின் அணியும் இத்தாலி அணியும் அடுத்த சுற்றான கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஆனால், நட்சத்திர அணியான குரோஷியா அணி இந்த தொடரை விட்டு வெளியேறி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த தொடரில் B பிரிவில் உள்ள அணிகளான ஸ்பெயின், இத்தாலி, குரோஷியா, மற்றும் அல்பேனியா அணிகளில் மற்ற பிரிவுகளில் ஏற்படாத ஒரு விறுவிறுப்பான போட்டிகள் இந்த பிரிவில் ஏற்பட்டது.
அல்பேனியா அணி கூட கடுமையான போட்டியை இந்த தொடரில் முன் வைத்தது என்றே கூறலாம். குரோஷியாவுக்கு எதிராக ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று B பிரிவின் ஆட்டத்தை தொடங்கி வைத்தது.
அதன்பின் குரோஷியா அணி அல்பேனியா அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியால் தான் குரோஷியா அணி வெளியேறியது என்றே கூறலாம்.
அதன்பின் நடப்பு சாம்பியனான இத்தாலி அணியுடனான போட்டியில் நேற்று குரோஷியா அணி மோதியது. விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் போட்டியை வெற்றி பெற்றால் மட்டுமே குரோஷியா அணி காலிறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்று இருந்தது.
இந்நிலையில் போட்டி அந்த போட்டியில் 1-1 என்ற கணக்குடன் சமநிலையில் முடிந்தது. இதன் காரணமாக ஒரு வெற்றியை கூட பெறாமல், குரோஷியா அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் பிடித்து இந்த தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது.
மேலும், 3 வெற்றிகளை ஸ்பெயின் அணி முதலிடத்திலும், 1 வெற்றி 1 தோல்வி 1 ட்ராவுடன் இத்தாலி அணி 2-ம் இடம் பிடித்து அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.