கோப்பா அமெரிக்கா 2024: 2-0 என கனடாவை வீழ்த்திய அர்ஜென்டினாவுக்கு முதல் வெற்றி .

2 வருடங்களுக்கு பிறகு இன்று கோப்பா அமெரிக்கா தொடரானது தொடங்கப்பட்டது, அதில் முதல் போட்டியில் அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது.

இந்த ஆண்டில் இன்று தொடங்கி இருக்கும் பெரிதும் எதிர்பார்த்த கால்பந்து தொடர் தான் கோப்பா அமெரிக்கா. இந்த தொடரின் முதல் போட்டியில் இன்று ‘A’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா அணியும், கனடா அணியும் மோதியது.

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் பக்கம் ஒரு தலையாகவே சென்றது. இருப்பினும் முதல் பாதியில் அர்ஜென்டினா அணி சில கோல்களை தவறவிடவும் செய்தனர்.

அதே நேரம் கனடா அணியும் கடுமையாக முயற்ச்சித்து பார்த்தும் கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் 0-0 என சமநிலையில் போட்டியானது நின்றது. அப்படியே இரண்டாம் பாதியின் 49-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் முதல் கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.

அதன் பின் ஆட்டத்தின் 88-வது நேரத்தில் லாடரோ மார்டினெஸ் 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் அர்ஜென்டினா அணி 2-0 என கனடாவை வீழ்த்தி கோப்பா அமெரிக்கா 2024 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.