T20-போராடி தோற்ற ஸ்காட்லாந்து-5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி.

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணியும் மோதியது.

நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 35-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், ஸ்காட்லாந்து அணியும் செயின்ட் லூசியா டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் நாணய சுழற்சில் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்த போட்டியானது ஸ்காட்லாந்து அணிக்கு ஒரு மிகமுக்கிய போட்டியாகும்.

அதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக ப்ரண்டன் மேக்குல்லன் 34 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டை எடுத்து அசத்தி இருந்தார்.

அதனை தொடந்து இலக்கு எட்ட ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அதன் படி சற்று தடுமாறினாலும், தக்க நேரத்தில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் (68 ஓட்டங்கள் ), ஸ்டொய்னிஸ் (59 ஓட்டங்கள் ) எடுத்தாதல் ஆஸ்திரேலியா அணி வெற்றியை பெற்றது.

அதிலும் கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், த்ரில்லராக சென்ற அந்த ஓவரில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதனால், 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து 186 ஓட்டங்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் B பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் அடுத்த சுற்றான சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தால், இங்கிலாந்து அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.