சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது அமெரிக்கா.
இன்று நடைபெற இருந்த டி20 லீக் போட்டியானது மழையின் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் லீக் போட்டியில் இன்று 30-வது போட்டியாக நடைபெற இருந்த அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே புளோரிடா உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் மைதானத்தில் நடைபெற இருந்த போட்டியானது மோசமான வானிலை (மழை) காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கனவே பிளோரிடா மகாணத்திற்கு மழை பொழிவும், மோசமான வானிலை (மழை) நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு அறிவித்திருந்த நிலையில், இன்று நடைபெற வேண்டிய அயர்லாந்து-அமெரிக்கா போட்டியானது டாஸ் கூட போடமுடியாமல் கைவிடப்பட்டுள்ளது.
இந்த போட்டியை விளையாடவில்லை என்றாலும் பாகிஸ்தான் அணிக்கு மிகமுக்கியமான போட்டியாகும், இந்த போட்டி நடைபெற்று அதில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு அடுத்த சுற்றுக்கு ஒரு வாய்ப்பு இருந்துருக்கும்.
தற்போது, அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றே கூறலாம், மோசமான வானிலையின் (மழை) காரணமாக இரு அணிகளுக்கும் (அயர்லாந்து, அமெரிக்கா) தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டதால் பாகிஸ்தான் அணி மீதம் இருக்கும் ஒரு போட்டியை வெற்றி பெற்றால் கூட புள்ளியின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.
மேலும், A பிரிவில் இருந்து இந்திய அணியும், அமெரிக்கா அணியும் அடுத்த சுற்றான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால், இந்திய அணி வருகிற ஜூன்-20ம் தேதி ஆப்கானிஸ்தான் அணியுடன் தனது முதல் சூப்பர் 8 சுற்று போட்டியை விளையாடவுள்ளது.