VPL-UK- இரண்டாவது ஆண்டு League போட்டி சிறப்பாக நடைபெற்றது.

பிரித்தானியாவில் நேற்று முன்தினம் 28/04/2024 ஞாயிற்றுக்கிழமை VOLLEYBALL PREMIER LEAGUE என்னும் VPL-UK போட்டியின் இரண்டாவது ஆண்டு League போட்டியானது VPL குழும நிர்வாகிகளான திரு.சுரேன்.திரு.சுரேஷ்.திரு.குட்டி.. திரு.வதனன்.திரு.குகன் ஆகியோரின் தலமையில் சிறப்பாக நடைபெற்றது

இப் பிரிமயர் லீக் போட்டியானது கடந்த மாதம் நடைபெற்ற ஏலம் மூலம் எடுக்கப்பட்ட 82 வீரர்களை 12 பிரிமியர் லீக் அணிகளின் உரிமையாளர்கள்
1.யுனைட்டட் ரைடர்ஸ்.

2.ஒஸ்கார்லீமா.

3.கோல்டன் ஈகிள்ஸ்.

4.வொலிபோல் கிங்ஸ்.
5.யுகே யுனைட்டட் ரைடர்ஸ்

6.தாய்மண்.

7.இசைத்தமிழ்.

8.லியோ.

9.பிக்பூட்.

10.பப்பாஅல்பா.

11.ரோமியோ நவம்பர்.

12.லண்டன் பயர் ஆகிய அணிகளில் விளையாட வைத்திருந்தனர் இதற்கேற்ப ஒவ்வொரு வீரர்களும் அணிகளும் தாம் ஒருவரிற்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக தமது திறமைகளை வெளிக்காட்டி மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தனர்.

இப்போட்டியில் சிறப்பாக அனைத்து அணியினரும் விளையாடியிருந்தாலும் அவ் அணிகளில் மிகச்சிறப்பாக விளையாடி முதல் மூன்று இடங்களையும் போட்டி நாயகர்களாகவும் வென்றவர்கள்

5A-side போட்டியில்VPL 2024 Champion ஆக கோல்டன் ஈகிள்ஸ் அணி £1000 களுடன் வெற்றிக்கிண்ணங்கள்.

VPL 2024 Runners ஆக யுனைட்டட் ரைடர்ஸ் அணி £500 களுடன் வெற்றிக்கிண்ணங்கள்

VPL 2024 3rd place ஐ இசைத்தமிழ் அணி £300 களுடன் வெற்றிக்கிண்ணங்களையும் தமதாக்கி கொண்டனர்.

இவ் 5A-side போட்டியின் Man of the match ஆக துஷி -கோல்டன் ஈகிள்ஸ் அணியில் இருந்தும்

Man of the series ஆக சுரேன் -யுனைட்டட் ரைடஸ் அணியில் இருந்தும் தெரிவுசெய்யப்பட்டனர்

அதேபோல் 4A-side போட்டியில்VPL 2024champion ஆக கோல்டன் ஈகிள்ஸ் அணி £1000 களுடன் வெற்றிக்கிண்ணங்கள்

VPL 2024 Runners ஆக பப்பா அல்பா அணி £500 களுடன் வெற்றிக்கிண்ணங்கள்

VPL 2024 3rd place ஐ யுனைட்ட் ரைடர்ஸ் அணி £300 களுடன் வெற்றிக்கிண்ணங்களையும் தமதாக்கிக்கொண்டனர்

இவ் 4A-side போட்டியின் Man of the Match ஆக பகி-கோல்டன் ஈகிள்ஸ் அணி

Man of the series ஆக மெஸ்சி -பப்பா அல்பா அணியிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டனர்

இவ்வருட VPL 2024 போட்டியில் 5A-side மற்றும் 4A-side இரண்டு போட்டிகளிலும் champion ஆக வென்ற கோல்டன் ஈகிள்ஸ் அணியினர் மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தனர் கடந்த 2023 VPL போட்டியிலும் இதே கோல்டன் ஈகிள்ஸ் அணியினர் 5A-side போட்டியின் champion ஆக வென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல இவ்வருட் 2024 VPL போட்டியின் சிறந்த அணியாக பப்பா அல்பா அணியும்

சிறந்த அணி தலைவராக நிமல் -இசைத்தமிழ் அணி தெரிவு செய்யப்பட்டனர்.

அதேபோல 5A-side போட்டியின் சிறந்த வீரனாக கிட்டு -இசைத்தமிழ் அணியிலிருந்தும்

4A-side போட்டியின் சிறந்த வீரனாக ஆகாஷ்-லியோ அணியிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டனர்

இவ் VPL 2024 போட்டியினை பெருமளவான மக்கள் நேரடியாகவும் மற்றும் நேரலை தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளித்திருந்தனர். இப்போட்டியினை நேரலை ஒளிபரப்பாக VPL போட்டியின் தொலைக்காட்சி அனுசரனையாளாரான மெய்வெளி தொலைக்காட்சியின் இயக்குனர் திரு.சாம் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார் அதே போல VPL புகைப்பட் அனுசரனையாளரான திரு.பாபாலக்சி அவர்கள் புகைப்படங்களை மிகவும் தத்தூரபமாக எடுத்து போட்டியை மெருகேற்றியிருந்தார்.