IPL2024-சிக்ஸர் மழையால் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி.

இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் நாணய சுழற்சில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ஓட்டங்கள் எடுத்தனர்.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் 75 ஓட்டங்களும் , சுனில் நரேன் 71 ஓட்டங்களும் , வெங்கடேஷ் ஐயர் 39 ஓட்டங்களும் , ரசல் 24 ஓட்டங்களும் , ஷ்ரேயாஸ் ஐயர் 28 ஓட்டங்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டையும், சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

162 ஓட்ட இலக்குடன் பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் தொடக்க வீரர்கள் இருவருமே அதிரடியாக விளையாடி வந்தனர். அதில் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் அரைசதம் விளாசினார். பவர் பிளேவின் கடைசி ஓவரில் மட்டும் 24 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.

அந்த ஓவரின் கடைசி பந்தில் ஓட்டங்கள் எடுக்க முயன்ற போது பிரப்சிம்ரன் சிங் 54 பந்தில் ரன் அவுட் ஆனார். இதனால் பஞ்சாப் அணி பவர் பிளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 93 ஓட்டங்கள் குவித்து இருந்தனர். அடுத்து ரைலி ரோசோவ் களமிறங்கினார். அடுத்தடுத்த ஓவரில் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் சிக்ஸர் மழையாக பொழிந்தார்.

இதன் காரணமாக அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. இருப்பினும் ரைலி ரோசோவ் 13-வது ஓவரில் 26 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ஷஷாங்க் சிங் 14-வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர் விளாசினார். சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 45 பந்தில் சதம் விளாசினார். அதே நேரத்தில் மறுபுறம் ஷஷாங்க் சிங் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ஓட்டங்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். களத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷஷாங்க் சிங் 68  ஓட்டங்களுடனும் , ஜானி பேர்ஸ்டோவ் 108 ஓட்டங்களுடனும் இருந்தனர். இந்த போட்டியில் மட்டும் மொத்தம் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.

டி20 போட்டியில் 262 ஓட்டங்கள் சேசிங் செய்து பஞ்சாப் வரலாறு சாதனை படைத்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு டி20 போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கிடையே 259 ஓட்டங்கள் சேசிங் செய்தது வரலாற்று சாதனையாக இருந்தது. அதை தற்போது பஞ்சாப் அணி முறியடித்துள்ளது.

பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 போட்டியில் வெற்றியும், 6 போட்டியில் தோல்வியும் தழுவி உள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை 8 போட்டியில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவி உள்ளது.