ஐபிஎல் 2024 -ஹைதராபாத் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டி சண்டிகாரில் நடைபெற்ற நிலையில் நாணய சுழற்சில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தனர்.

ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 64 ஓட்டங்களும் , அப்துல் சமது 25 ஓட்டங்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டையும், ஹர்ஷல் படேல், சாம் கரன் தலா 2 விக்கெட்டையும், ரபாடா 1 விக்கெட்டை பறித்தனர். 183 ஓட்டங்கள் இலக்குடன் அணியின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவ், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.

2-வது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 4 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 14 ஓட்டங்கள் எடுத்து வெளியேற அடுத்து களமிறங்கிய சாம் கரண் 29, சிக்கந்தர் ராசா 28, ஜிதேஷ் சர்மா 19 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினர்.

இருப்பினும் மத்தியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 46* , அசுதோஷ் சர்மா 33*ஓட்டங்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 180 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டையும், பாட் கம்மின்ஸ், நடராஜன், நிதிஷ் ரெட்டி, ஜெய்தேவ் உனட்கட் 1 விக்கெட்டையும் பறித்தனர்.

இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் ஹைதராபாத் அணி 3 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வி தழுவியுள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் அணி 2 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது.