ஐபிஎல் 2024 வீரர்களின் ஏலப் பட்டியல்: இலங்கையின் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் விடப்படும் வீரர்களின் பட்டியலை போட்டி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர், அதில் 214 வீரர்கள் இந்திய வீரர்கள் என கூறப்படுகிறது.

ஏலம் விடப்படவுள்ள 119 வெளிநாட்டு வீரர்களில் 8 இலங்கை வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்ச ஏலத் தொகை
இலங்கை வீரர் ஒருவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகையாக 1.5 கோடி இந்திய ரூபாய் காணப்படுகிறது.

குறித்த பெறுமதி பிரிவின் கீழ் வனிந்து ஹசரங்க ஏலத்திற்கு தெரிவாகியுள்ளார்.

எஞ்சிய 7 வீரர்கள் இம்முறை ஏலத்தில் 50 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியான வகையில் ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

குசல் மெண்டிஸ், டில்ஷான் மதுஷங்க, சரித் சசங்க, தசுன் ஷனக, துஷ்மந்த சமிர, லஹிரு குமார மற்றும் நுவன் துஷார ஆகியோர் இலங்கையில் இருந்து ஐபிஎல் ஏலத்தில் இடம் பெற்றுள்ள ஏனைய வீரர்கள் ஆவர்.