2023 பலோன் டி’ஓர் விருது : சிறந்த கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி.!

கால்பந்து உலகில்  உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் பலோன் டி’ஓர் விருதானது, கால்பந்து விளையாட்டில் ஒவ்வொரு ஆண்டு சிறப்பாக செயல்படும் வீரர்கள், அணிகளுக்கு வழங்கபடுகிறது.  இந்த விருதானது பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

அதே போல இந்தாண்டும் கால்பந்து உலகில் சிறந்த வீரர்களுக்கு பலோன் டி’ஓர் விருதுகளை பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்குக்கான பலோன் டி’ஓர்  விருது , அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. கடைசியாக  நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணியை சிறப்பாக வழிநடத்தி உலகக்கோப்பையை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.