மெத்தியூஸ் மற்றும் துஷ்மந்த சமீர அணியில் இணைப்பு.

இலங்கை அணியின் சகலத்துறை ஆட்டகாரர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டிகளில் விளையாடும் இலங்கை அணிக்கு மேலதிக வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தேசிய தேர்வாளர் குழுவால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரமோத் மதுஷனை அணிக்கு அழைப்பதே திட்டமாக இருந்தது. ஆனால், துஷ்மந்த சமீர முழுமையாக குணமடைந்துள்ளதால் அவரை அணிக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழு தீர்மானித்திருந்தது.

அத்துடன், துஷ்மந்த சமீர அனுபவமுள்ள பந்துவீச்சாளராக இருப்பதாலும் அவரை அணிக்கு அழைக்க தேர்வாளர் குழு தீர்மானித்திருந்தது.

மதீஷ பத்திரனவின் பந்துவீச்சுக் கையில் ஏற்பட்ட உபாதைக் காரணமாக பத்து நாட்களுக்கும் அதிகமாக அவர் ஓய்வில் இருக்க வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

துஷ்மந்த சமீரவை மேலதிக வீரராக சேர்ப்பது 15 பேர் கொண்ட அணிக்குள் அவரை கொண்டு வர அணி நிர்வாகத்திற்கு வாய்ப்பளிக்கும்.

36 வயதான ஏஞ்சலோ மெத்யூஸை அணியில் இணைத்துக்கொள்ளும் திட்டம் முன்னதாக தேர்வாளர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் மிடில்-ஆர்டரில் இலங்கை அணி தவறாக செயல்படுவதால், அவரைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருவதால், மெத்யூஸ் அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டு முதல் மெத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அவர் விளையாடிய மூன்று ஆட்டங்களில் 18, 0 மற்றும் 12 ஓட்டங்கள் என்ற அடிப்படையில் பெற்றிருந்ததால் அவரை உலகக்கிண்ண அணியில் தேர்வாளர் குழு இணைத்துக்கொள்ளவில்லை.