நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 2 விக்கெட் இழந்து 248 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

ஒருநாள் உலககோப்பைத் தொடரின் 11-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தனர். பங்களாதேஷ் அணியில் முதலில் லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். லிட்டன் தாஸ் வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் ஆனார்.

பின்னர் மெஹிதி ஹசன் மிராஸ் களமிறங்கி தன்சித் ஹசனுடன் நிதானமாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர். நிதானமாக விளையாடிய தன்சித் 16 ஓட்டங்களும் , மெஹிதி ஹசன் மிராஸ் 30 ஓட்டங்களுடன் களத்தை விட்டு வெளியேறினார்கள். அவரையடுத்து, அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், முஷாப்குர் ரஹீம் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர்.முஷாப்குர் ரஹீம் 75 பந்துகளில் 66 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

ஆனால் ஷாகிப் அல் ஹசன் அரைசதம் அடிக்க முயன்றும் அரைசதம் அடிக்காமல் 40 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் இறங்கிய மஹ்முதுல்லாஹ் ௪௧ ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்று நின்றார். இறுதியாக பங்களாதேஷ் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், போல்ட், மாட் ஹென்றி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 246 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க வீரராக கான்வே, ரச்சின் ரவீந்திரன் இருவரும் களமிறங்கினர். முதல் இரண்டு போட்டியில் சிறப்பாக விளையாடி சதம், அரைச்சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரன். இந்த போட்டியில் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறி ரசிகர்கள் அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து களம் இறங்க கேப்டன் வில்லியம்சன் மற்றும் கான்வே இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இதில் கான்வே 59 பந்துகளில் 3 பவுண்டரி என மொத்தம் 45 ஓட்டங்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் வில்லியம்சன் காயம் காரணமாக 78 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செல் 67 பந்தில் 89 ஓட்டங்கள் விளாசி கடைசிவரை களத்தில் இருந்தார். இதில் 4 சிக்ஸர் 6 பவுண்டரி அடங்கும். மறுபுறம் இருந்த க்ளென் பிலிப்ஸ் 11 பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என மொத்தம் 16 ஓட்டங்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார். இறுதியாக நியூசிலாந்து அணி 42.5 ஓவரில் 2 விக்கெட் இழந்து 248 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் நியூசிலாந்து அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

பங்களாதேஷ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டியில் தோல்வியடைந்து. 2 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது.