ஆசிய கோப்பை: இலங்கை அணிக்கு 253 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 போட்டி இன்று (14) மழை காரணமாக தாமதமாகவே ஆரம்பமானது.
இன்றைய நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் வெற்றி பெற்றார்.
அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
மழைக்காரணமாக 42 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Rizwan ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 86 ஓட்டங்களை பெற்றதுடன் Abdullah Shafique 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் Matheesha Pathirana 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.