உலகக் கோப்பை தகுதிசுற்று-21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இலங்கை.

உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் சுற்றின், சுப்பர் – 6 சுற்று போட்டிகளில் இன்று இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, அந்த அணி 47.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, தனஞ்சய டி சில்வா 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

திமுத் கருணாரத்ன 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் 30க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், நெதர்லாந்து அணியின் லோகன் வேன் பீக் 26 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 18 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 214 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நெதர்லாந்து அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 192 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில், அதிகபடியாக அணித்தலைவர் ஸ்கொட் எட்வட்ஸ் 67 ஓட்டங்களையும், வெஸ்லி பாரெசி 51 ஓட்டங்களை பெற்றுக்கொத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன 31 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 16 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.