டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலக திமுத் தீர்மானம்.

எதிர்வரும் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் பின்னர் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

வெலிங்டனில் முடிவடைந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளது.