இலங்கை – நியூசிலாந்து முதல் டெஸ்ட் ஆரம்பம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 36 ஓவர்கள் நிறைவில் ஒரு 3 விக்கெட்டுக்களை இழந்து 155ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

துமித் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 87 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

தற்போது தினேஸ் சந்திமால் மற்றும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் ஆகியோர் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

பந்து வீச்சில் டிம் சவுதி 2 விக்கெட்டுக்களையும், மெட் என்ரி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.