நுவரெலியாவில் வெள்ளி கிண்ணத்தை சுவீகரித்தது சன்பேர்ட்ஸ் அணி.

செ.திவாகரன்

இன்றைய தினம் நுவரெலியா உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டியில் வெள்ளி கிண்ண இறுதிப் போட்டியில் சன் பேட்ஸ் அணி மற்றும் மூன் பிளைன் அணியினர் மாலை 3:30 மணியளவில் நுவரஎலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் நான்குக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் சன் பேட்ஸ் அணியினர் வெள்ளி கிண்ணத்தை கைப்பற்றியது. இப்போட்டியின் முதல் பாதியில் சன் பேட்ஸ் அணி 3.0 என முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாம் பாதியில் மேலும் சார்பாக ஒரு கோலினையும் சன் பார்ட்ஸ் புகுத்தியது அதே நேரம் மூன்பிளைன் அணி இரண்டாம் பாதியில் 2 கோலினை புகுத்தியதன் மூலமாக 4 க்கு 2 என கணக்கில் சன் பேர்ட்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. இப் போட்டியில் சன் பேர்ட்ஸ் அணி சார்பாக யோகேஸ்வரன் 1 மஹிந்தகுமார் 2 கோலினையும் ஜீவன் ராஜ் 1 கோலினையும் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது.