உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எம்பாப்பேவுக்கு தங்க ஷூ மற்றும் மெஸ்சிக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது.

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிக்கும் வீரருக்கு தங்க ஷூ வழங்கப்படும். இதன்படி இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவரான பிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே தங்க ஷூவை தட்டிச் சென்றார். அவர் மொத்தம் 8 கோல்கள் அடித்து முதலிடம் பிடித்தார்.

மெஸ்சி 7 கோல்களுடன் 2-வது இடத்தை பெற்றார். அதே சமயம் ஒட்டுமொத்தத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான சிறந்த வீரருக்குரிய தங்க பந்து விருதை மெஸ்சி தட்டிச் சென்றார். சிறந்த இளம் வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் மிட் பீல்டர் என்சோ பெர்னாண்டஸ் வென்றார், சிறந்த கோல்கீப்பருக்கான கோல்டன் க்ளோவ் விருதை எமி மார்டினெஸ் வென்றார்.