இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு புதிய யாப்பு.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு புதிய யாப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு புதிய யாப்பினை வரைவதற்காக ஆட்சிநிபுணர்கள் சுயாதீன குழுவொன்று ஏற்படுத்தப்படும் என  அமைச்சர் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் சார்பில் ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதே கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்ப குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் புதிய யாப்பினை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்