T20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி வெற்றி.

96

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின. நாணய சுழற்சயில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து . அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களே எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ராசா 40 ஓட்டங்களும் , வில்லியம்ஸ் 28 ஓட்டங்களும் எடுத்தனர். அந்த அணியில் சிக்கந்தர் ராசா, சீன் வில்ல்லியம்சை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும், கிளாசென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

118 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஸ்டீபன், மேக்ஸ் ஓட்வாட் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் ஸ்டீபன் 8 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து டாம் கூப்பர் களம் இறங்கினார். மேக்ஸ் ஓட்வாட், டாம் கூப்பர் இணை அருமையாக ஆடி ஓட்டங்களை சேகரித்தனர்.

 

இதில் டாம் கூப்பர் 32 ஓட்டங்களும் , மேக்ஸ் ஓட்வாட் 52 ஓட்டங்களும் அடித்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய காலின் 1 ஓட்டமும் , எட்வர்ட்ஸ் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர் . இறுதியில் அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மேக்ஸ் ஓட்வாட் 52 ஓட்டங்கள் அடித்தார்.