விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு.

வில் வித்தை, ஏர் ரைபிள், கரப்பந்து மற்றும் வலைபந்து விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ள இளைஞர், யுவதிகளுககு தேசிய இளைஞர் படையணி அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில், கரப்பந்து மற்றும் வலைப்பந்து போட்டிகளுக்கு இளைஞர்களை ஆட்சேர்ப்பு செய்யும் பணியை தேசிய இளைஞர் படையணி தொடங்கியுள்ளது.

நீங்கள் 24 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், ஆண் உயரம் 5 அடி 10 அங்குலம் அல்லது அதற்கு மேல், பெண் உயரம் 5 அடி 8 அங்குலம் அல்லது அதற்கு மேல் இருந்தால் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விளையாட்டுகள் திறமையான அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களால் நடத்தப்படுகின்றன. இதில் ஆர்வமுள்ள இளைஞர்கள், யுவதிகள்  கீழே உள்ள தகவல்களை பூரணப்படுத்தி  076 – 0825143 என்ற இந்த எண்ணிற்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்குாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

01. பெயர்:

02. வயது:

03. உயரம்:

04. விண்ணப்பிக்கும் விளையாட்டு:

05. தே..அ.அ எண்:

06. மாவட்டம்:

07. தொலைபேசி எண்:

08. அருகிலுள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி மையம்:

09. முகவரி:

அத்தோடு இது குறித்த மேலதிக  தகவல்களுக்கு 070-2587405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள முடியுமென விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.