ஐசிசி டி-20 உலககோப்பையின் 9ஆவது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

எட்டாவது ஐசிசி டி-20 தொடரின் ஒன்பதாவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. நாணய சுழற்சயில் வென்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடியது .

இதன்படி களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் குவித்திருந்தது. அதிகபட்சமாக குசல் மெண்டிஸ், 79 ஓட்டங்களும் , அசலான்கா 31 ஓட்டங்களும் குவித்தனர். நெதர்லாந்து அணி தரப்பில், வான் மீகேரன் மற்றும் பாஸ் டீ லீட் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

163 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. அந்த அணியில் மேக்ஸ் ஓ டவுட் மட்டும் கடைசி வரை போராடினார். அவர் 71 ஓட்டங்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில், வணிந்து ஹசரங்கா 3 விக்கெட்கள் எடுத்தார்.

இதனால் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. குசல் மெண்டிஸ், ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் சூப்பர்-12 க்கான வாய்ப்பை இலங்கை அணி நெருங்கி இருக்கிறது