• Friday, July 4, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

வன்முறை நிகழ்ந்த கஞ்சுருஹான் கால்பந்து மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு.

By Editor On Oct 18, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் உள்ள கஞ்சுருஹான் கால்பந்து மைதானத்தில் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது மைதானத்தில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 130க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். இதை தொடர்ந்து இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட கால்பந்து கிளப்பின் அதிகாரிகள் 2 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டதாக இந்தோனேசிய கால்பந்து சம்மேளனம் அறிவித்தது.

இந்த நிலையில் வன்முறை நடைபெற்ற கால்பந்து மைதானத்தை இடிக்க இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது. மைதானத்தை இடிக்கப்பட்டு மீண்டும் முறையான வசதிகளுடன் கட்டப்படும் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிபா தலைவர் கியானி இன்பான்டினோவைச் சந்தித்த பின்னர் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “

Catchup shows

மலாங்கில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தை இடித்து, பிபா தரத்தின்படி நாங்கள் மீண்டும் அதை கட்டுவோம். வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடிய முறையான வசதிகளுடன் மைதானம் மீண்டும் கட்டப்படும்” என்றார்.

Prev Post

T20 உலகக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணியை 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றி.

Next Post

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு: எடுக்கபடும் நடவடிக்கை

© 2025 - Meiveli. All Rights Reserved.