முதல் டி20 – ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி.
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பெர்த்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சயில் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் எடுத்தது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தனர். ஹேல்ஸ் 84 ஓட்டங்களும் , பட்லர் 68 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 209 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. டேவிட் வார்னர் அதிரடியாக ஓட்டங்கள் குவித்தார் .அரைசதம் அடித்த அவர் 73 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் .
மிட்செல் மார்ஷ் 36 ஓட்டங்களும், ஸ்டோய்னிஸ் 35 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில், ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், டோப்ளே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.டி20 தொடரில் இங்கிலாந்து 1- 0 என முன்னிலை வகிக்கிறது.