• Wednesday, May 21, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

முதல் டி20 கிரிக்கெட்: 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி.

By Editor On Oct 6, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த பின ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுகிறது.

Awurudu Kumra Kumari

ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள் அப்படியே இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சயில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்கள் எடுத்தது.

Catchup shows

அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 39 ஓட்டங்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேஸ்லேவுட் 3 விக்கெட்டுகளும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் 146 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பின்ச் 58 ஓட்டங்களும் , மேத்யூ வேட் 39 ஓட்டங்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷெல்டன் காட்டெரல் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இதன்படி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

Prev Post

இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளவே சர்வதேச தரப்பு முயற்சி: வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு.

Next Post

பாடசாலை நூலகத்தில் வைத்து 12 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்.!

© 2025 - Meiveli. All Rights Reserved.