நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: இந்திய ‘ஏ’ அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இந்தியா ‘ஏ’-நியூசிலாந்து ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
இதில் நாணய சுழற்சயில் வென்ற இந்திய ‘ஏ’ அணி முதலில் துடுப்பெடுத்தாடியது 49.3 ஓவர்களில் 284 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது . கப்டன் சஞ்சு சாம்சன் 54 ஓட்டங்களிலும் , ஷர்துல் தாக்குர் 51 ஓட்டங்களுடனும் (33 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), திலக் வர்மா 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து ‘ஏ’ அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 38.3 ஓவர்களில் 178 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது . இதனால் இந்திய ‘ஏ’ அணி 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேன் கிளெவர் 83 ஓட்டங்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ராஜ் பாவா 4 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர்கள் ராகுல் சாஹர், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டும் வீழத்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய ‘ஏ’ அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.