ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்றது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் நாணய சுழற்சி போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது . தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர். 8 ஓவர் போட்டி என்பதால் முதல் பந்து முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர்.

கேமரூன் கிரீன் 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் (டக் அவுட்) மற்றும் டிம் டேவிட் (2 ஓட்டங்கள் ) அக்சர் படேல் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினர். 5-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி 46 ஓட்டங்கள் சேர்ந்திருந்த போது அதிரடியாக விளையாடி வந்த பின்ச் பும்ரா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 2-வது டி20 போட்டி: இந்திய அணி வெற்றி பெற 8 ஓவர்களில் 91 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியாஅவர் 15 பந்துகளில் 31 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கடைசி போட்டியில் ஜொலித்த மேத்தீவ் வேட் இந்த போட்டியிலும் பின் வரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 8-வது ஓவரில் 3 சிக்சர்களை அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் குவித்தது. வேட் 20 பந்துகளில் 41 ஓட்டங்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை தொடர்ந்து 91 ஓடங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா- லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ஒருமுனையில் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ரோகித் சர்மா சிக்ஸர் மழைகளை பொழிந்தார். இந்திய அணி 2.5 ஓவர்களில் 39 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ராகுல் 10 ஓட்டங்களில் (6 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து ரோகித் உடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி 2 பவுண்டரிகளை எடுத்த நிலையில் ஜாம்பா பந்துவீச்சில் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அதற்கு அடுத்த பந்திலே சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்திய அணி 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார்.

அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்த போதிலும் ரோகித் சர்மா அதிரடியை குறைக்கவில்லை. 6-வது ஓவரில் அவர் இரண்டு பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 9 ஓட்டங்கள் தேவைப்பட களத்தில் ரோகித்- தினேஷ் கார்த்திக் ஜோடி இருந்தனர். முதல் பந்தில் சிக்சர் விளாசிய கார்த்திக் அடுத்த பந்தை பவுண்டரி விரட்டி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

இந்திய அணி 7.2 ஓவர்களில் 92 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 4 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.