இந்தியா-ஆஸ்திரேலியா 20 ஓவர் போட்டி டிக்கெட் வாங்குவதில் குழப்பம்-20 பேர் காயம்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டி20 போட்டி ஐதராபாத்தில் வருகிற 25ம் தேதி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான் டிக்கெட் விற்பனை ஜிம்கானா மைதானத்தில் நடைபெற்றது.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் 3 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக கூறியது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டி போட்டனர். டிக்கெட்டுகளை வாங்க ஆயிரகணக்கன் ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து ரசிகர்களை லேசான தடியடி நடத்தி போலீசார் கலைய செய்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் காயமடைந்தனர், மேலும் ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் 5 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்துள்ளனர். போலீசாரும் காயம் அடைந்தனர்.காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். டிக்கெட் விற்பனையை சீராக தொடர, டிக்கெட் கவுன்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.