விராட் கோலியின் சாதனையை முறியடித்த முகமது ரிஸ்வான்.

68
LESS

பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்கிறது. கராச்சியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 68 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம்  ஓட்டங்கள்  அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சாதனையை முறியடித்து, பாபர் அசாமின் சாதனையை ரிஸ்வான் சமன் செய்தார்.

கோலி தனது 56-வது சர்வதேச டி20 இன்னிங்ஸ்சில் 2,000 ஓட்டங்களை கடந்தார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஏற்கனவே 52-வது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்து இருந்த நிலையில் ரிஸ்வானும் தனது 52-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்து உள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்களை கடந்த வீரர்களில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் இருவரும் முதல் இடத்தில் உள்ளனர்.