ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற ஆபிகானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். . இந்திய அணியில் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுகிறார். அதன்படி தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், விராட் கோலி களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் பந்துகளை சிக்சர்,பவுண்டரிக்கு விரட்டினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 119 ஓட்டங்கள் சேர்த்தனர். தொடர்ந்து கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சூர்யகுமார் வந்த வேகத்தில் 6 ஓட்ட்ங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த ரிஷப் பண்ட் களமிறங்கினார்.

மறுபுறம் விராட் கோலி அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ௨௧௨ ஓட்டங்கள்குவித்தது. விராட் கோலி 61 பந்துகளில் 212 ஓடங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

தொடர்ந்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஹஸ்ரத்துல்லா மற்றும் முகமதுல்லா களமிறங்கினர். இவரும் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியளித்தனர். அடுத்து களமிறங்கிய இப்ராகிம் சட்ரன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், இந்திய வீரர் புவனேஸ்வர் குமாரின் சிறப்பான பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து ௧௧௧ ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் சட்ரன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64 ஓடங்களுடன் களத்தில் இருந்தார். அதேவேளை சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் 4 ஓவர்கள் வீசி 4 ஓட்டங்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.