அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லஸ் அல்காரஸ் அரையிறுதிக்கு தகுதி

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

இந்த போட்டியில் 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லஸ் அல்காரஸ் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் கார்லஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவுடன் மோத இருக்கிறார்.