உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா – வாசிம் அக்ரம்

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் நேற்று இரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதின. அதில் நாணய சுழற்ச்சியில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது . பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 147  ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 19.4 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சிறப்பாக  துடுப்பெடுத்தாடியது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளை வீத்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்நிலையில், உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா என்று தான் நம்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் நிலையான, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவர் இதே போல் நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தினால் உலகின் தலைசிறந்த வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக அவர் மாறுவார். தற்போது உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தான் என்று நான் கருதுகிறேன். அவர் அதற்காக செயல்படுகிறார். அவர் மனநிலையும் அவ்வாறே இருக்கிறது. அவர் 140+ கிமீ வேகத்தில் பந்து வீசுகிறார். அனைத்து வித கிரிக்கெட்டிலும் அவர் இந்திய அணியில் முக்கிய வீரராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.