அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆண்டி முர்ரே வெற்றி.
ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிந்து விட்டன. ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கியது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான முதல் சுற்று போட்டி ஒன்றில் இங்கிலாந்து நாட்டின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் முர்ரே 7-5, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.