டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் ரபாடா முன்னேற்றம்.

இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின்னர் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதன்படி, இங்கிலாத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டும், 2-வது இன்ங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபாடா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

டெஸ்ட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 2-வது இடத்திலும், ரபாடா 3-வது இடத்திலும், ஷாகின் அப்ரிடி, பும்ரா 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளனர். டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் மாற்றமில்லாமல் ஜோரூட், மார்னஸ் லபுஸ்சேன், பாபர் அசாம் முதல் 3 இடங்களில் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர். வங்கதேச வீரர் ஷகிப்-அல்-ஹசன் 3-வது இடத்தில் உள்ளார்.