பதுளையில் தீப்பிடித்து எரிந்த ஓட்டோ

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பதுளையில் இருந்து நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று திடீரென தீ பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

திங்கட்கிழமை (02) முற்பகல் வேளையில் சென் ஜேம்ஸ் பகுதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.