தமிழ்நாட்டினுடைய தந்தை யார்: சாட்டை துரைமுருகன் விளக்கம்.

எங்கள் தாத்தன் கிங்மேக்கர் கர்மவீரர் காமராஜர் தான் தமிழ்நாட்டினுடைய தந்தை என்று பேசியுள்ளார் சாட்டை துரைமுருகன்.தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருவரையொருவர் தாக்கியும் பேசி வருகிறார்கள்.

திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு போட்டியாக தற்போது தமிழக வெற்றிக் கமக கட்சியும் இணைந்துள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்கிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பேசுகையில், ‘யார் தமிழ்நாட்டினுடைய தந்தையாக இருந்திருக்கணும். நம்மள நாம அப்பா படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி, கல்யாணமா முடிச்சு கொடுத்து, சீர்வரிசை செய்து கொடுத்து,நமக்கு வீடும் கட்டிக் கொடுத்த தந்தை. குடிச்சுப்புட்டு கூத்தடிச்சுபுட்டு எல்லாம் பண்ணிபுட்டு நாமளே உழைச்சு நாமளே சாப்பிட்டா நம்ம தந்தை என்று சொல்லி எண்ணாக போகிறது.

தந்தை இருக்கலாம். ஆனால் நமக்கு எல்லாம் செய்கிறவர்தான் தந்தை. அந்த இடத்துல 1954இல் ஒருத்தர் முதலமைச்சர் ஆனார். அன்று சுதந்திரம் அடைந்து ஏழே வருடம். வறுமை, பசி,பட்டினி மக்களுக்கு எந்தவிதமான அடிப்படை தேவைகளும் இல்லை.

மூடப்பட்ட 6 ஆயிரம் பள்ளிகளையும் திறந்துமொத்தம்  16 ஆயிரம் பள்ளிகளை திறந்து, அன்று ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாலே மதிய உணவுத் திட்டத்தை திறந்து, சாதி பாகுபாடு இருக்கக் கூடாது என்று பள்ளி மாணவர்களுக்கு சீருடை கொடுத்து.மூன்று கிலோ மீட்டர் உள்ள சின்ன பிள்ளைகள் நடக்க முடியாது என்பதால் மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி தொடங்கி, அதுக்கப்புறம் படிச்ச பிள்ளைக்கு வேலை கொடுத்து, அதற்கான வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அமைத்து எங்களை படிக்க வைத்தவன் எங்கள் தாத்தன் கிங்மேக்கர் கர்மவீரர் காமராஜர் தான் தமிழ்நாட்டினுடைய தந்தை என்று பேசியுள்ளார்.