நாடாளுமன்றத்த் தேர்தலை எதிர்கொள்வதில் தமிழ் மக்கள் தடுமாற்றம் : தமிழ் சிவில் சமூக அமையம் கரிசனை வெயிட்டுள்ளது.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தமிழ் மக்கள் மத்தியில் தாம் இதுவரை கட்டிக் காத்த தமிழ்த் தேசிய அடையாளம் மற்றும் அபிலாசைகள் பற்றிக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் காட்ட பல்வேறு சக்திகள் தீவிரமாக முயற்சிக்கின்றன என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாக கருத்துக்ளை இவ்வiமையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்கள் வெளிப்படுத்தியுள்ள கணிசமான மாற்றம், ஊழலை ஒழிப்பதன் மூலம் நாட்டைச் சுபீட்சமடையச் செய்வோம் என்ற கோசம் மற்றும் வழமையான அனைவரும் சமம், அனைவருக்கும் அபிவிருத்தி போன்ற கோசங்களை முன்வைக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரங்களால் சிலர் தடுமாறுகின்றார்கள். 2009ன் பின் நடந்த பொதுத் தேர்தல்களில் தமிழ்த் தேசியத்தின் காவலர்களாகக் காட்டி தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்களால் தமிழர் தாயகத்திற்கு எந்த விதமான பாரிய அபிவிருத்தியையும் கொண்டு வர முடியாமல் உள்ளமைக்கு அப்பிரதிநிதிகளது திறமையின்மையே காரணம் என்று பரப்பப்படும் யதாரத்தமற்ற கருத்துகளை நம்புவதாலும் இதுவரை காலமும் தேசியத்திற்கான வாக்கைப் பெற்று வென்றவர்கள் சிலரது ஒழுக்கமற்ற, தமிழ்த் தேசியத்திற்குப் பிறழ்வான நடத்தைகளாலும் தமிழ்த்தேசியத்திற்கான கட்சிகள் என நம்பப்படும் கட்சிகளினுள் அதிகரித்து வரும் பிளவுகளாலும் சிலர் விரக்தியுற்றுள்ளமையால் தடுமாறுகின்றார்கள்.
இன்னும் சிலரோ தமது நண்பர், உறவினர் தேர்தலில் நிற்கிறார் நேரில் வந்து வாக்குக் கேட்டுவிட்டார் என்பதற்காக முடிவெடுப்பதில் தடுமாறுகின்றார்கள். இவர்களே இத்தனை காலமாக தியாகங்களால் கட்டிக் காத்துவந்த தமிழ்த் தேசியத்தைத் காப்பதற்காக வழமைபோல் வாக்களிப்பதா அல்லது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக வாக்களிப்பதா எனக் குழம்பி நிற்கின்றனர்.ஆகவே தமிழ்த் தேசிய அரசியற் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது தடுமாற்றமேதுமின்றி தொடர்ந்து உயரிய உறுதியுடன் நிற்கும் கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எமது மக்களை பணிவன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.