திராவிடம் கடற்கரையை கல்லறையாக ஆக்கும் : நாம் தமிழர் கட்சி சீமான் விமர்சனம்

விஜயின் தமிழக வெற்றி கழகம் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. விஜயின் அரசியல் கொள்கைகளை நாம் தமிழர் கட்சி சீமான் விமர்சித்து பேசினார். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றாக முடியாது என ஆரம்பத்தில் இருந்தே சீமான் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது நான் தமிழ் மகன், என் தேசம் தமிழ் தேசம், என் அரசியல் தமிழ் தேச அரசியல்.
நான் அதுல பாதி இதுல பாதி கிடையாது.

நாடு தமிழ்நாடு. இங்கு வாழும் மக்கள் அவர்களுடைய மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, தொன்றுதொட்ட வேளாண்மை, காட்டு வளம், கனிம வளம், நிலவளம், மலைவளம், மணல் வளம், கடல் வளம், இவற்றைக் காப்பது, பெண்ணிய உரிமை,எல்லோருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம்.

அதைக்கொண்டு வாழ்கிற பெருமை மிக்க வாழ்வு, தொன்று தொட்ட வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது எல்லாத்துக்கும் எனக்கு ஒரு அரசியல் இருக்கு. என்னோட அரசியல் தமிழ் தேச அரசியல். திராவிடம்னா என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன என்று சொல்ல சொல்லுங்க பார்ப்போம். திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்னு இல்ல.

அது எப்படி கொலைகாரனும் செத்தவனும் ஒண்ணா இருப்பான்? நான் எங்க அப்பா செத்தா உளமாற அழுவேன். நீ ஒப்புக்கு அழுவாய். நீயும் நானும் ஒன்றா..? தமிழ் தேசியம் கடற்கரையை கடற்கரையா பார்க்கும், காக்கும். திராவிடம் கடற்கரையை கல்லறையாக ஆக்கும் இடுகாடா ஆக்கும்.