ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?
2, 3 ஆம் விருப்பு வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படும்!

ஆர்.சனத்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வெற்றிபெறுவதற்கு, செல்லுபடியான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை கட்டாயம் பெற வேண்டும். சிலவேளை எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாத சந்தர்ப்பத்தில் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது பற்றிய பதிவே இது. வேட்பாளர் எவரேனும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெறாவிடின் ஜனாதிபதி தேர்தல் மறுபடியும் நடத்தப்படுமா என்ற கேள்வி சிலருக்கு இருக்கலாம். அவ்வாறு நடக்காது. ஏனெனில் வெற்றியை நிர்ணயிப்பதற்குரிய வழிமுறைகள் உள்ளன.

செல்லுபடியான மொத்த வாக்குகளில் (அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழித்துவருவது)
ரவி – 45 %
ராஜா – 40 %
ரோஜா – 05 %
பூஜா – 03 %
அமல் – 02 %
வாக்குகளையும் பெற்றுள்ளனர் என எடுத்துக்கொள்வோம்.
அந்த வகையில் முதல் சுற்றில் எவரும் 50 % +1 வாக்குகளை பெறாததால் 2ஆம், 3ஆம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டே வெற்றி நிர்ணயிக்கப்படும்.


(அதாவது 1 அல்ல புள்ளடி இடப்பட்டிருந்தால்)

பூஜா என்பவருக்கு வாக்களித்தவர் தமது 2 ஆவது விருப்பு வாக்கை அமல் என்பவருக்கு வழங்கி இருந்தால், 3 ஆவது விருப்பு வாக்கு கவனத்தில் கொள்ளப்படும். மூன்றாவது விருப்பு வாக்கை ரவிக்கு வழங்கி இருந்தால் அந்த வாக்கு ரவிக்கு வழங்கப்படும். மாறாக 3ஆவது விருப்பு வாக்கை ராஜாவுக்கு வழங்கி இருந்தால் அது ராஜாவுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு 37 வேட்பாளர்களினதும் 2 ஆம் 3 ஆம் வாக்குகள் கவனத்தில்கொள்ளப்பட்டு எண்ணப்பட்ட பிறகு,

அதாவது (47% + 43% ) 90 சதவீத வாக்குகளில் 45 சதவீதத்துக்கும் மேல் பெற்றவர் வெற்றிபெறுவார். அந்தவகையில் 47 சதவீத வாக்குகளைப் பெற்ற ரவி வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.



ஆர்.சனத்