5 தொகுதிகளில்  3வது இடத்திற்கு நாம் தமிழர் வேட்பாளர்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3வது இடத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 5 தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் அதிமுக, பாமக, அமமுக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளை பின்னுக்கு தள்ளி உள்ளனர். தமிழகத்தில் ஈரோடு,  கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் நாம் தமிழர் வேட்பாளர்கள் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

ஏனைய இடங்களில் பெரும்பாலும் 4வது இடத்தைப் பிடித்துள்ளர். இந்தத் தேர்தலில் கடந்த தேர்தலைபோல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழ்நாடு  புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆண்கள் 20, பெண்கள் 20 என சரிசமமாக பிரித்து பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளித்து தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய்ப்பளித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டது. இதில் 16 மருத்துவர்கள், 6 பொறியாளர்கள், 7 ஆசிரியர்களும் அடங்குவர். இது தவிர கல்வியாளர், முனைவர், தொழில்முனை வோர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது. இந்த மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ‘மைக்’ சின்னத்தில் போட்டியிட்டது.