அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் மனைவி Rosalynn Carter காலமானார் .

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி Jimmy Carter இன் மனைவி Rosalynn Carter மரணமடைந்துள்ளார்.

Rosalynn Carter தமது 96 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயக் காட்சியைச் சேர்ந்த Jimmy Carter 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பணியாற்றியவர்.

Jimmy Carter மற்றும் Rosalynn Carter இருவரும் 1946 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த நிலையில் Jimmy Carter இன் அரசியல் பயணத்தில் Rosalynn Carter இன் ஒத்துழைப்பு இன்றியமையாதது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தமது அனைத்து சாதனைக்கும் தமக்கு இணையான பங்குதாரராக Rosalynn Carter இருப்பதாக Jimmy Carter தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவசியம் ஏற்படும் போது புத்திசாலித்தனமான வழிகாட்டல்களையும் ஊக்குவிப்புகளையும் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.