உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்:  பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த பண்டிகையின்போது மக்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, சுயசார்பு பாரதம் என்ற நமது கனவை நிறைவேற்றுவோம். வாங்கும் பொருட்களுக்கான தொகையை செலுத்த யு.பி.ஐ. டிஜிட்டல் பணம் செலுத்தும் முறையையும் மக்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், உள்ளூர் தயாரிப்புகள் அல்லது கைவினைஞர்களுடன், இந்தியாவில் தயாரித்த ஸ்மார்ட்போனில் எடுத்த ‘செல்பி’யை ‘நமோ ஆப்’பில் மக்கள் பகிர்ந்துகொள்ளலாம்.

அந்த படங்களில் சிலவற்றை நான் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொள்வேன். அது, ‘வோக்கல் பார் லோக்கல்’ என்ற உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கத்துக்கு ஊக்கம் கொடுக்கும்’ என தெரிவித்துள்ளார்.