இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்-இசையமைப்பாளர் டி.இமான்.

சிவகார்த்திகேயன் சினிமா கேரியரில் பல ஹிட் பாடல்களை கொடுத்தது என்றால் இசையமைப்பாளர் டி.இமான் என்று கூறலாம். இவர்களுடைய கூட்டணியில் வெளியான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, உள்ளிட்ட படங்களின் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் ஹிட் ஆனது.

கடைசியாக இவர்கள் இருவரும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் ஒன்றாக இணைந்தனர். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் எந்த திரைப்படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். எனவே, திடீரென சிவகார்த்திகேயன் மற்றும் டி.இமான் இருவரும் இணைந்தது படம் செய்யாததால் இருவருக்கு இடையே என்ன பிரச்சனை என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், பேட்டி ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் டி.இமான் இனிமேல் இந்த ஜென்மத்தில் நான் அவருடன் இணைந்து படம் செய்யமாட்டேன். அப்படி படம் செய்தால் அது அடுத்த ஜென்மத்தில் தான் நடக்கும் என தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் டி.ஈமானுக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்துவிட்டாராம். எனவே, இதன் காரணமாக அவருடன் பேசுவது இல்லை எனவும் இனிமேல் அவருடைய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தால் கூட இசையமைக்க மாட்டேன் எனவும் டி.இமான் தெரிவித்துள்ளார்.

அப்படியே அவருக்கு படங்களுக்கு இசையமைக்கவேண்டும் என்றாலும் கூட அடுத்த ஜென்மத்தில் தான் இசையமைப்பாளராக இருந்து அவரும் ஒரு நடிகராக இருந்தால் என்றால் இசையமைக்க வாய்ப்பு எனவும் கூறியுள்ளார். மேலும் இவர்கள் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை எதனால் பிரச்சனை என்ன துரோகம் என்பதை பற்றி டி.இமான் கூறவில்லை. இருப்பினும் திடீரென டி.இமான் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.