மில்லியன் வென்ற பாரிஸ் வாசியை தேடுகின்றது லொத்தர் சபை.

பணத்தைப் பெற இன்னும் சில தினங்களே அவகாசம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஈரோ மில்லியன் நல்வாய்ப்புச் சீட்டில் ஒரு லட்சம் ஈரோக்களை வென்றவர் இன்னமும் அதனை உரிமைகோரிப் பெற்றுக் கொள்ளவில்லை என்று அறிவிக்கப்படுகிறது. அவருக்கான கால அவகாசம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 23.59 மணியுடன் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த ஜூன் 30 ஆம் திகதிக்குரிய ஈரோ மில்லியன்ஸ் -மை மில்லியன்(Euromillions–My Million) சீட்டிழுப்புக்கான ஆட்டத்திலேயே இந்தத் தொகை வெல்லப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான ஈரோ பணத்தை வென்றவர் ஒரு பாரிஸ் வாசியாக இருக்கக் கூடும். தனது நல்வாய்ப்புச் சீட்டை அவர் பாரிஸில் உள்ள லொத்தோ விற்பனை நிலையம் ஒன்றிலேயே வாங்கியிருக்கிறார்.

வெற்றியாளர் தன்னை அடையாளம் கண்டு பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக லொத்தோ நிறுவனம் அவரது சீட்டின் DF 321 79 79 என்ற குறியீட்டு (code) இலக்கத்தை வெளியிட்டுள்ளது. வெல்லப்பட்ட அதிர்ஷ்ட லாபச் சீட்டில் இந்த இலக்கங்கள் காணப்படும்.

கால வரையறைக்குள் பெற்றுக் கொள்ளத் தவறினால் பத்து லட்சம் ஈரோக்கள் வெகுமதியை அவர் நிரந்தரமாகவே இழந்து விடுவார். அந்தத் தொகை அடுத்துவருகின்ற சீட்டிழுப்புகளில் ஒரு விதி விலக்காக பரிசுத் தொகையுடன் சேர்க்கப்படும்-என்று பிரான்ஸின் லொத்தோ நிறுவனம் (Française des Jeux) தெரிவிக்கிறது. வெற்றியாளர் தன்னை அடையாளம் கண்டு கொண்டால் தாமதிக்காமல் உடனடியாகவே ஐந்து லட்சம் ஈரோக்களுக்கு மேற்பட்ட வெற்றியாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட 09.69.36.60.60 என்ற விசேட இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை – கடந்த முதலாம் திகதிக்கான ஈரோ மில்லியன்ஸ் சீட்டிழுப்பில் பிரான்ஸைச் சேர்ந்த ஒருவர் ஜக்பொட் பரிசுத் தொகையான 109 மில்லியன் ஈரோக்களை (109,268,140) வென்றுள்ளார். அந்த அதிர்ஷ்டசாலியும் இன்னமும் தன்னை அடையாளப்படுத்திப் பரிசுத் தொகைக்கு உரிமைகோரவில்லை.

35, 43, 37, 5, 4 ஆகிய அதிர்ஷ்ட இலக்கங்களுக்கும் 5 – 6 ஆகிய நட்சத்திர இலக்கங்களுக்குமே இந்தப் பெரும் பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">