12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளார். . அதன்படி, ராஜாராமன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். குமார் ஜெயந்த் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிஜி தாமஸ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனந்தகுமார் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அர்ச்சனா பட்நாயக் தொழில்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பூஜா குல்கர்னி நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.