எதிர்க்கட்சியினர் இரட்டை வேடம் போடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன  தெரிவிப்பு


ராஜபக்சவை திருடர்கள் என்று முத்திரை குத்தும் எதிர்க்கட்சியினர் ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வாக்களிப்பதன் மூலம் இரட்டை வேடத்தை கடைபிடிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இந்த நிலைமைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி குழுக்கள் கவனமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.பாராளுமன்ற எதிர்க்கட்சியினரின் நடத்தையை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக சஜித் மற்றும் டளஸ் தரப்பினர் செயற்படும் விதத்தை இலங்கை மக்கள் அவதானமாக அவதானிக்க வேண்டும் எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த, புறக்கோட்டையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.