“ஆசிய கண்டத்தில் தூய்மையான கடற்கரைகளாக கிழக்கு மாகாணத்தின் கடற்கரைகளை மாற்றுவோம்”

Keshihan Ilamuruganathan- திருகோணமலை

 

Keshihan Ilamuruganathan- திருகோணமலை

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் “ஆசிய கண்டத்தில் தூய்மையான கடற்கரைகளாக கிழக்கு மாகாணத்தின் கடற்கரைகளை மாற்றுவோம்” என்ற எண்ணக் கருவின் அடிப்படையில் மாபெரும் சிரமதானம் நேற்றைய தினம் (27.05.2023) கிழக்கு மாகாணம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

இதில்  திருக்கோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபைக்கு உட்பட்ட மாதுமை அம்பாள் பாடசாலைக்கு பின்னால் காணப்படும் சோலையடி கடற்கரைப் பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடன், கடற்கரை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது திருக்கோணமலை பட்டிணம் சூழலும் பிரதேச சபையின் செயலாளர், பிரதேச செயலாளர், திருக்கோணமலை நகர சபை செயலாளர், கிழக்கு மாகாணத்தின் உதவி பிரதம செயலாளர், இன்னும் பல அரச உத்தியோகத்தர்கள், குறித்த பகுதியைச் சேர்ந்த சமூக அமைப்புக்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏழு முப்பது மணி அளவில் ஆரம்பித்த கடற்கரை சுத்தமாக்கல், சுத்தமாக்கலுக்கு பயன்படுத்தப்படும் விசேட இயந்திரங்களின் உதவியுடன் கடற்கரையானது செந்தில் தொண்டமான் அவர்களால் தூய்மையாக்கப்பட்டது.

பங்கு கொண்டவர்களுக்கு இளநீர் வழங்கப்பட்டதுடன் சிரமதானம் முடிவுற்றது.