எல் சால்வடார் கால்பந்து மைதான நெரிசலில் சிக்கிய 12 பேர் பலி.

எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது.

இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரில் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண வந்த ரசிகர்கள் டிக்கெட் வைத்திருந்தும், மைதானத்தினுள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரமைடந்த ரசிகர்கள் குறிப்பிட்ட நுழைவு வாயிலை தகரத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

இதனால் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமுற்றனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 பேர் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த எல் சால்வடார் ஜனாதிபதி நயிப் புகலே உத்தரவிட்டுள்ளார்.