வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

வெசாக் தினத்தினை முன்னிட்டு, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் அடிப்படையிலையே அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்கள், தண்ட பணம் செலுத்த முடியாததால் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் உள்ளிட்டவர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 34வது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த விசேட அரச மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை  நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய 982 ஆண் கைதிகள் மற்றும் 06 பெண் கைதிகள் உட்பட 988 பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.