இ-சிகரட்களுக்குத் தடை.
இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, இ-சிகரட்களுக்குத் தடை விதிக்கப்போவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
புகை பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கும் என விளம்பரப்படுத்தப்பட்ட இ-சிகரட்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், புற்றுநோய், சுவாசக்கோளாறு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.மேலும், இ-சிகரட் பயன்படுத்துவோர் நாளடைவில் புகை பழக்கத்திற்கும் அடிமையாக வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.